கால்பந்து போட்டியில் உதயமாகியுள்ள புதுநாயகன்

Report Print Deepthi Deepthi in கால்பந்து

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது.

இந்தாண்டு உலகக் கோப்பை போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு கொடுக்கப்படும் மிகவும் உயரிய விருதான் கோல்டன் பால் விருது குரோஷியாவின் லூகா மோட்ரிச்க்கு வழங்கப்பட்டது.

குரோஷியாவின் வெற்றிக்கு ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக பங்காற்றினார். லூகா மோட்ரிச் மில்பீல்டர் பகுதியில் முதுகெலும்பாக திகழ்ந்தார்.

அவரை தாண்டி பந்தை கடத்திச் செல்வது கடினம். அதேபோல் அவர் கையில் பந்து கிடைத்தால் புயல் வேகத்தில் பந்தை எதிரணி கோல் எல்லைக்குள் கொண்டு சென்று விடுவார்.

லூகா மோட்ரிச் பந்தை கடத்துவதற்காக 63 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். ஒரு போட்டிக்கு சராசரியாக 10.5 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். இதுதான் இதுவரை அதிகபட்ச தூரமாக உள்ளது.

இந்த ஆண்டிற்கான கால்பந்து போட்டியில் மிக உயரிய விருதான கோல்டன் பால் விருதினை தட்டிசென்றுள்ளதன் மூலம் புது நாயகனாக உருவெடுத்துள்ளார்.

பிரேசிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இவ்விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.

கோல்டன் பால் விருதை வென்றதன் மூலம் கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் லூகா ஒரு புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers