குரோசியா அணியை ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலே கதிகலங்கவிட்ட இங்கிலாந்து வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கால்பந்து

குரேசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிரன் டிப்பர் போட்ட கோல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் நேற்றைய அரையிறுதிப் போட்டியில் குரோசியா-இங்கிலாந்து அணிகள் மோதின.

இப்போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணியின் உலகக்கிண்ண கனவு தகர்ந்தது. இருப்பினும் இப்போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலே அதாவது 5-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கிடைத்த ப்ரி கிக் வாய்ப்பை, இங்கிலாந்து வீரர் கிரன் டிப்பர் அற்புதமாக கோல் அடித்து குரோசியா அணியை ஆரம்பத்திலே ஆட்டம் காண வைத்தார்.

இந்த கோல் அடித்தவுடன் இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் துள்ளிக் குதித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...