குரேஷியா வெற்றி: புகைப்படக் கலைஞர் மீது விழுந்து சின்னாபின்னமாக்கிய வீரர்கள்

Report Print Deepthi Deepthi in கால்பந்து
347Shares
347Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி குரேஷியா அணி இறுதிப்போட்டிக்கு அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த வெற்றியை குரேஷியா கால்பந்து வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது எதிர்பாராத விதமாக ஏ.எஃப்.பி மெக்சிகோ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் யூரி கோர்டெஸ் மீது விழுந்தனர். வீரர்கள் பாய்ந்து மேலே விழ புகைப்படக் கலைஞர் கீழே சிக்கிக்கொண்டார்.

நிலை தடுமாறினாலும் அவர் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்கத் தவறவில்லை. குரேஷியா வீரர் மாரியோ, அவருக்கு கை கொடுத்து உதவ முயன்றது வரை அவர் அழகாக தன் கமெராவில் பதிவு செய்துள்ளார்.

இந்த நேரத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஏ.எஃப்.பி செய்தி ஊடகம், யாரும் கவலைகொள்ள வேண்டாம். யூரி நலமுடன் இருக்கிறார்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்