சுழன்றடித்த ஹோண்டா சூறாவளி: செனகலை சமநிலையில் பூட்டிய ஜப்பான்

Report Print Arbin Arbin in கால்பந்து

ஜப்பான், செனகல் அணிகள் மோதிய உலகக்கிண்ணம் தொடரின் லீக் போட்டி சமநிலையில் முடிந்தது.

எக்டரின்பர்க் மைதானத்தில் நடந்த குரூப் - எச் பிரிவின் லீக் போட்டியில், ஜப்பான் அணி செனகல் அணியை எதிர்கொண்டது.

இதில் முதல் பாதியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய செனகல் அணிக்கு போட்டியின் 11வது நிமிடத்தில் மானே முதல் கோல் அடித்தார்.

இதற்கு ஜப்பானின் இன்யூ (34) பதிலடி கொடுக்க, முதல் பாதியின் முடிவில் போட்டி 1-1 என சமநிலை வகித்தது.

பின் பரபரப்பாக துவங்கிய போட்டியின் இரண்டாவதுபாதியின் துவக்கத்திலும் செனகல் வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர்.

போட்டியின் 71வது நிமிடத்தில், செனகல் வீரர் வாகே இரண்டாவது கோல் அடித்தார். இதற்கு ஜப்பான் வீரர் ஹோண்டா (78வது நிமிடம்) பதிலடி கொடுக்க போட்டி சூடுபிடித்தது.

பின் கோல் அடிக்க இரு அணி வீரர்களும் எவ்வளவு போராடிய போதும் கடைசி வரை கோல் எதுவும் அடிக்க முடியாத காரணத்தால், போட்டி 2-2 என சமனில் முடிந்தது.

இப்போட்டியில் ஜப்பான் அணிக்காக 78வது நிமிடத்தில் கோல் அடித்த ஹோண்டா, உலகக்கிண்ணம் வரலாற்றில் ஜப்பான் அணிகாக மூன்று உலகக்கிண்ணங்களில் (2010, 2014, 2018) கோல் அடித்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமை பெற்றார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...