கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுவிஸ் வீரர்களின் மீது ஒழுங்கீன நடவடிக்கை

Report Print Kabilan in கால்பந்து

செர்பியா அணியை வீழ்த்தியதால் கொண்டாடத்தில் ஈடுபட்ட சுவிஸ் வீரர்களின் மீது பிபா ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து கால்பந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. அதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியின்போது சுவிஸ் வீரர்களான Xherdan Shaqiri, Granit Xhaka ஆகியோர் கோல் அடித்ததற்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அது அல்பேனியாவின் கழுகு கொடியை அவமானப்படுத்தும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இது Balkans இடையே அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விடயம் பெரும் சர்ச்சையாக வெடித்ததால், சுவிஸின் நடசத்திர வீரர்களான Xherdan Shaqiri மற்றும் Granit Xhaka ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிபா தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா, கால்பந்து மைதானத்தில் அரசியல் சார்ந்த செய்திகளையோ, அடையாளமாக கொண்ட புகைப்படங்களையோ அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...