மெஸ்ஸி அணி தோல்வி: தற்கொலை செய்த கேரள ரசிகரின் உடல் மீட்பு

Report Print Fathima Fathima in கால்பந்து

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய ரசிகர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் கோட்டையம் பகுதியை சேர்ந்தவர் தினு அலெக்ஸ், மெஸ்ஸியின் தீவிர ரசிகராவார்.

இந்நிலையில் கடந்த 21ம் திகதி நடந்த போட்டியில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது.

இதனையடுத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்க, தினு அலெக்ஸை தீவிரமாக தேடி வந்தனர்.

மோப்ப நாய் உதவியுடன் தேடியதில், ஆற்றின் கரையோரம் நின்றுவிட்டது, எனவே ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் எண்ணினர்.

இதன்படி இன்று ஆற்றிலிருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...