சவுதியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய உருகுவே

Report Print Arbin Arbin in கால்பந்து

ஃபிபா உலக கிண்ணம் பிரிவு சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் உருகுவே 1-0 என சவுதி அரேபியாவை வென்றது.

இதன் மூலம் ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு நுழைந்தன. ஏ பிரிவில் எகிப்து மற்றும் சவுதி அரேபியா வெளியேறின.

ஃபிபா உலக கிண்ணம் போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று ரஷ்யா ஆச்சரியப்பட வைத்தது.

ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் எகிப்தும் உருகுவேவும் மோதின. இதில் நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின் எகிப்தை 1- 0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.

இந்த நிலையில், உருகுவே மற்றும் சவுதி அரேபியா இன்று நடந்த ஆட்டத்தில் விளையாடின. உருகுவே அணியின் லூயிஸ் சூரஸ்க்கு இது 100வது போட்டியாகும்.

இன்றைய ஆட்டத்தில் அவர் கோலடிக்க 1-0 என முன்னாள் சாம்பியன் உருகுவே வென்றது. இதன் மூலம் தலா 2 வெற்றிகளைப் பெற்றுள்ள ரஷ்யா மற்றும் உருகுவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

அதே நேரத்தில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடைந்த எகிப்து மற்றும் சவுதி அரேபியா பிரிவு சுற்றிலேயே வெளியேறுகின்றன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...