ரொனால்டோ அடித்த கோல் பிடிக்கவில்லையா? வெற்றியை கொண்டாடாமல் இருந்த வீரர்

Report Print Santhan in கால்பந்து

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் போது போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்த போது, ஒரு போர்ச்சுக்கல் வீரர் மட்டும் ஏன் மைதானத்தில் கொண்டாடமல் இருந்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் தற்போது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தற்போது நடைபெற்று வரும் போர்ச்சுக்கல் மற்றும் மொராக்கோ அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்ததன் மூலம் அந்தணி 1-0 என்ற முன்னிலையில் விளையாடியது.

இந்நிலையில் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியின் போது கடைசி நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ப்ரி கிக்கை கோல் அடிக்கிறார்.

இதனால் ஆட்டம் 3-3 டிரா ஆனதால், இதை போர்ச்சுக்கல் வீரர்கள் வெற்றி பெற்றது போல் கொண்டாடினர்.

இந்த உற்சாகத்தில் போர்ச்சுகல் வீரர்கள் அத்தனை பேரும், களத்தை விட்டு வெளியே வந்து ரொனால்டோவைச் சுற்றி வளைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போர்ச்சுக்கல் வீரரான ஜோஸ் போன்டே மட்டும் இதை கொண்டாடமால் மைதானத்திற்கு உள்ளேயே இருந்தார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் சக்கை போடு போட்டது. ஒரு சிலர் ரொனால்டோ அடித்த கோல் பிடிக்கவில்லையோ என்றெல்லாம் கிண்டல் செய்து கமெண்ட் போட்டிருந்தனர்.

தற்போது அது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. FIFA விதிமுறைப்படி, ஓர் அணியின் அத்தனை வீரர்களும் அதாவது கோல் கீப்பரை தவிர்த்து மைதானத்துக்கு வெளியே கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், எதிரணி உடனடியாக கிக் ஆப் செய்யலாம்.

இதன் காரணமாகவே ஜோஸ் போன்டே கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் களத்தில் இருந்துள்ளார்.

அப்படி அவர் இதை கொண்டாடியிருந்தால் ஸ்பெயின் உடனடியாக கிக் ஆப் செய்து கோல் அடித்திருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...