மைதானத்தில் குப்பை அள்ளிய ரசிகர்கள்! வெற்றிக் கொண்டாட்டம்

Report Print Fathima Fathima in கால்பந்து

போலந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் செனகல் ரசிகர்கள் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.

பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் எச் பிரிவில் நடந்த போட்டியில் போலந்தை 2-1 என்ற கணக்கில் செனகல் வென்றது.

வெற்றியை செனகல் ரசிகர்கள் கொண்டாடிய விதம் அனைவராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

காரணம், போட்டி முடிந்த பின்னர் மைதானத்தின் ஒருபகுதியை ரசிகர்களே சுத்தம் செய்துள்ளனர்.

இவர்களுடன் ஜப்பான் ரசிகர்களும் இணைந்து கொண்டு மைதானத்தை சுத்தப்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் இச்செயல் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளுடன் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்