வலியால் துடித்து பாதியிலே வெளியேறிய நட்சத்திர வீரர் நெய்மர்

Report Print Santhan in கால்பந்து

பயிற்சியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் பாதியிலே வெளியேறியதால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யாவில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டி 1-1 என்று சமநிலையில் முடிந்ததால் அதுவே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்த நிலையில், அடுத்த போட்டிக்காக நெய்மர் தன்னுடைய சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பயிற்சியை தொடர முடியாமல் காலில் வலியோடு நொண்டிய படி பாதியில் வெளியேறினார்.

பயிற்சியின் போது அவர் ஒருகட்டத்தில் வலியால் துடித்த போது பிரேசில் அணி நிர்வாகம், சக வீரர்கள் வேதனையடைந்தனர், அரைமணி நேர பயிற்சிக்குப் பிறகே முடியாமல் கணுக்கால் வலியினால் வெளியேறினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் கால்பந்தாட்ட போட்டியில் நெய்மர் காயமடைந்ததார். இதனால் பிரேசில் அணி தோல்வியை சந்தித்தது.

தற்போது மீண்டும் நெய்மர் பிரேசில் அணிக்கு திரும்பி மின்னல் வேகத்தில் ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில், நெய்மர் மீண்டும் காயமடைந்திருப்பது பிரேசில் அணியின் நிர்வாகத்திற்கு பேரடியாக உள்ளது.

மேலும் இதற்கு முக்கிய காரணம் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது அந்தணி வீரர்கள் நெய்மரை குறைந்தது 10 முறையாவது பவுல் செய்து கீழே தள்ளினார்கள் என்றும், இதை நடுவர்கள் கண்டுகொள்ளவே இல்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்