சந்தோஷத்தில் ரசிகரின் செயல்: மைதானத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

Report Print Fathima Fathima in கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நடப்பு சாம்பியன் ஜேர்மனியை வீழ்த்திய சந்தோஷத்தில், மெக்ஸிகோ ரசிகர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

மாஸ்கோவின் லுஸ்கினி மைதானத்தில் நடந்த F பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜேர்மனி, மெக்ஸிகோவுடன் மோதியது.

முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோ முதலிடம் பிடிக்க, இரண்டாவது பாதியில் ஜேர்மனியின் முயற்சிகள் வீணாகின.

விறுவிறுப்பான ஆட்டத்தில் மெக்ஸிகோ வெற்றி பெற ரசிகர்களும், நிர்வாகிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதன்போது மைதானத்தில் ரசிகர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் காதலியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்