நாங்க உலக சாம்பியனுக்கே அதிர்ச்சி கொடுத்தவங்க: போலந்துக்கு ஆட்டம் காட்டிய செனகல்

Report Print Arbin Arbin in கால்பந்து

ஃபிபா உலக கிண்ணம் தொடரில் எச் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் கொலம்பியாவை 2-1 என ஜப்பான் வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் செனகல் 2-1 என போலந்தை வென்றுள்ளது.

கடைசியாக 2002ல் உலக கிண்ணம் தொடரில் விளையாடிய செனகல் அப்போது காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

ஆனால், தொடர்ந்து மூன்று உலக கிண்ணம் தொடரில் விளையாடுவதற்கு தகுதிப் பெறவில்லை. கடைசியாக 2006 ஆம் ஆண்டு நடந்த உலக கிண்ணம் தொடரில் விளையாடிய போலந்து, பிரிவு சுற்றிலேயே வெளியேறியது.

இந்த உலக கிண்ணம் தொடரில் அனைத்து பிரிவுகளிலும் தலா 2 ஆட்டங்கள் முடிந்த நிலையில், எச் பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என கொலம்பியாவை வென்று அசத்தியது. இரண்டாவது ஆட்டத்தில் போலந்துடன் செனகல் மோதியது.

இந்த ஆட்டத்தில் 61 சதவீத நேரம் பந்து போலந்து அணியிடமே இருந்தது. அந்த அணிக்கு 11 முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் 4 கோல் பகுதிக்குள் சென்றது. ஆனால், செனகல் அந்த கோல் வாய்ப்புகளை அபாரமாக தடுத்து நிறுத்தியது.

குறைந்த நேரமே பந்தை தங்களிடம் இருந்தாலும், அதில் பல கோலடிக்கும் வாய்ப்புகளை செனகல் உருவாக்கி கொண்டது.

ஆட்டத்தில் 37வது நிமிடத்தில் போலந்தின் சியோனெக் சேம் சைடு கோலடிக்க செனகல் 1-0 என முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் நியாங்க் கோலடிக்க செனகல் 2-0 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவதற்கு சற்று முன், 86 நிமிடத்தில் போலந்தின் கிர்சோவியாக் கோலடிக்க, 2-1 என முன்னிலையை போலந்து குறைத்தது.

நாங்க, 2002ல் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தவங்க என்று இந்த ஆட்டத்தில் செனகல் அபாரமாக விளையாடி, 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.

8வது முறையாக உலக கிண்ணம் தொடரில் விளையாடும் போலந்து, 1986ல் கடைசியாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

2002ல் ஒரு வெற்றி, 2 சமன் என செனகல் அணி பிரிவு சுற்றில் தோல்வி அடையவில்லை.

2002 ஆம் ஆண்டு பிரிவு சுற்று ஆட்டத்தில் அப்போதைய நடப்பு சாம்பியனான பிரான்ஸை 1-0 என செனகல் வென்று அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers