அர்ஜெண்டினாவிற்கு இது அவமானம்: முன்னாள் ஜாம்பவான்

Report Print Kabilan in கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி, ஐஸ்லாந்து அணியிடம் டிரா கண்டது அவமானமாகும் என அர்ஜெண்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தனது முதல் லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் அணியான அர்ஜெண்டினா 1-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்துடன் டிரா கண்டது.

இந்த போட்டியின் முடிவு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், நட்சத்திர வீரரான மெஸ்சி தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிட்டதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து அர்ஜெண்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறுகையில்,

‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானதாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை.

எதிரணிக்கு தகுந்தபடி ஆட்ட யுக்தியை அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜெண்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers