நடுவானில் கொழுந்துவிட்டெரிந்த சவுதி கால்பந்து அணி சென்ற விமானம்: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in கால்பந்து

சவுதி அரேபிய கால்பந்து அணி புறப்பட்டு சென்ற விமானமானது நடுவானில் கொழுந்துவிட்டெரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உலக கிண்னம் கால்பந்து தொடர் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. 31 அணிகள் பங்கேற்கும் இந்த உலக கிண்ணம் தொடரில் லீக் ஆட்டங்கள் தற்போது களைகட்டி வருகின்றனர்.

துவக்க ஆட்டத்தில் ரஷ்யாவுடன் மோதிய சவுதி அரேபியா 5-0 என்ற கோல் கணக்கில் மிகவும் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் புதன்கிழமை நடைபெறும் 2-வது ஆட்டத்திற்காக மைதானம் அமைந்துள்ள Rostov பகுதிக்கு சவுதி அரேபியா அணி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளது.

விமானம் தரையிறங்கும் சில நிமிடங்கள் முன்னர் அதன் இயந்திர பகுதியில் பறவை ஒன்று சிக்கியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான இயந்திரம் தீபற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அவசர அவசரமாக விமானத்தை விமானி Rostov விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக கால்பந்து அணியினருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. மட்டுமின்றி விமானம் தரையிறங்கும் சில நிமிடங்கள் முன்பு இந்த விபத்து நடந்துள்ளதாலும் அசம்பாவிதங்களில் இருந்து தப்பியுள்ளது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துபோன சவுதி கால்பந்து அணியினர் உயிர் தப்பியதே தாங்கள் செய்த புண்ணியம் என தெரிவித்துள்ளனர்.

புதனன்று சவுதி அரேபிய அணி உருகுவே அணியை எதிர்கொள்கிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்