அறிமுக ஆட்டத்தில் சிதைந்த பனாமா: துரத்தி துரத்தி அடித்த பெல்ஜியம்

Report Print Arbin Arbin in கால்பந்து
267Shares

ஃபிபா உலகக் கிண்ணம் போட்டியில் ஜி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் அறிமுக அணியான பனாமாவை 13வது முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

உலகக் கிண்ணம் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஜி பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன.

முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் 3-0 என பனாமாவை வென்றது. அடுத்த ஆட்டத்தில் துனீஷியாவை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

உலகக் கிண்ணம் தொடரில் மிக நீண்ட அனுபவம் கொண்ட பெல்ஜியம் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணம் தொடர்ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.

கடந்த உலகக் கிண்ணம் தொடரில் கால் இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.

முதல் முறையாக உலகக் கிண்ணம் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பனாமா பெற்றுள்ளது. அறிமுக அணியாக இருந்தாலும், உலகக் கிண்ணம் தொடரில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது.

இன்று நடந்த ஜி பிரிவு முதல் ஆட்டத்தில் பனாமாவுடன் பெல்ஜியம் மோதியது. ஆட்டத்தின் முதல் விநாடி முதல் கடைசி வரை பெல்ஜியத்தின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.

கத்துக்குட்டி அணியுடன் விளையாடுகிறோம் என்று சுவிட்சர்லாந்துக்கு எதிராக பிரேசில் சொதப்பியதுபோல் இல்லாமல், பெல்ஜியம் மிகவும் சிறப்பாக விளையாடியது.

ஆட்டத்தின் 62 சதவீத நேரம் பந்து பெல்ஜியம் அணியிடமே இருந்தது. அதில் 15 முறை கோலடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டது.

அதில் 6 முறை கோல் பகுதிக்கு பந்து செலுத்தப்பட்டது. கிடைத்த ஒரு சில வாய்ப்பை பனாமா பயன்படுத்திக் கொண்டாலும் பெல்ஜியத்தின் ஆட்டத்துக்கு அந்த அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் மெர்டன்ஸ் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு லுகாகு 69 மற்றும் 75 நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.

இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பெல்ஜியம் வென்றது. இதன் மூலம் ஜி பிரிவில் 3 புள்ளிகளுடன் தற்போதைக்கு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடைசியாக விளையாடிய 9 பிரிவு சுற்று ஆட்டங்களில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததில்லை. கடைசியாக நடந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

13வது முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது.

கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் விளையாடியது. பனாமா அணி முதல் முறையாக உலகக் கிண்ணம் தொடரில் விளையாடுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்