உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் திணறிய பிரேசில்! நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள்

Report Print Santhan in கால்பந்து
207Shares

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் தலை சிறந்த அணியான பிரேசில் அணியை ஆட்டம் காண வைத்து சுவிட்சர்லாந்து அணி டிரா செய்தது.

ரஷ்யாவில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது.

பிரேசில் அணி தான் பங்கு பெற்ற 20 உலகக்கிண்ணத் தொடர்களில் முதல் ஆட்டங்களில் 16 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

அத்தகைய வலிமையான அணியை இன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து தன்னை வலிமையான அணியாக நிரூபித்துள்ளது சுவிட்சர்லாந்து.

இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. ஆட்டத்தின் நடுவே பல சூழ்நிலைகளில் பந்தைச் சரியாகக் கொண்டுசேர்க்க விடாமல் நெய்மர் தடுக்கப்பட்டார்.

பிலிப் கொடினோஹ் முதல் பாதியின் இறுதியில் ஒரு கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

ஆனால், இரண்டாவது ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபர் ஒரு கோல் அடித்துச் சமன்செய்தார்.

அதன்பிறகான ஆட்டத்தில் இரண்டு அணியிரும் தங்களைத் தற்காத்துக்கொள்ள முனைந்ததில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

வலுமை மிக்க பிரேசில் அணி சுவிட்சர்லாந்து அணியுடன் வெற்றி பெற முடியாமல் திணறியது, நெயமரை பல்வேறு சூழ்நிலைகளில் வீழ்த்தியதே சுவிட்சர்லாந்து அணியின் வெற்றிக்கு காரணம்.

இது சுவிட்சர்லாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், வெற்றி பெற்றுவிடுவோம் என்று எண்ணிய பிரேசில் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியே என்று கூறலாம்.மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்