ஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடினார்கள்: ஜேர்மனி பயிற்சியாளர் அதிருப்தி

Report Print Kabilan in கால்பந்து
448Shares

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மெக்சிகோவிற்கு எதிரான போட்டியில், ஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடியதாக அந்த அணியின் பயிற்சியாளர் அதிருப்தியடைந்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. கடந்த 1982ஆம் ஆண்டுக்கு பிறகு, உலகக் கிண்ண தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜேர்மனி அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் ஜேர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லொய், தங்கள் அணியின் இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஜேர்மனி அணியின் தோல்வி குறித்து அவர் கூறுகையில், ‘முதல் பாதி ஆட்டத்தில் ஜேர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்களை அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.

எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்றது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆனால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஜேர்மனி அணி தோல்வியில் இருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்