உலகக் கிண்ண கால்பந்து தொடர்: புதிய சாதனை படைத்த ரொனால்டோ!

Report Print Kabilan in கால்பந்து
502Shares
502Shares
ibctamil.com

போர்த்துகலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, நான்கு உலகக் கிண்ண தொடரிலும் கோல் அடித்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெயின்-போர்த்துகல் அணிகள் மோதின. சோச்சி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டம் வெற்றி, தோல்வி இன்றி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போர்த்துகல் அணிக்காக அவர் அடித்த 6வது ஹாட்ரிக் கோல் இதுவாகும். மேலும், நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் கோல் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு பிரேசில் வீரர் பீலே, சீலர் மற்றும் ஜேர்மனி வீரர் குளோஸ் ஆகியோர் நான்கு உலகக் கிண்ண போட்டிகளிலும் கோல் அடித்துள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்