உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பிரம்மாண்ட துவக்க விழா: கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Report Print Kabilan in கால்பந்து
259Shares
259Shares
ibctamil.com

ரஷ்யாவில் வரும் 14ஆம் திகதி துவங்க உள்ள உலகக் கிண்ண கால்பந்து துவக்க விழாவில், ஹாலிவுட் பிரபலம் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில், வரும் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன.

தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற 31 அணிகள் உலகக் கிண்ண போட்டியில் நுழைந்துள்ள நிலையில், போட்டியை நடத்தும் அணி என்பதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜூன் 14ஆம் திகதி தொடங்க உள்ள இந்த தொடரின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 500 உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ரஷ்யாவின் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன. உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸின் இசை நிகழ்ச்சியுடன் இந்த விழா துவங்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிரபல ரஷ்ய இசைக் கலைஞரான அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர் 'Live It Up' எனும் உலகக் கிண்ண பாடலை பாட உள்ளனர்.

Den of Geek
Getty

மேலும் வீரர்கள் சார்பில், இரண்டு முறை பிரேசில் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த ரொனால்டோ பங்கேற்க உள்ளார்.

Getty

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்