மைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள்! ஐஎஸ் எச்சரிக்கை

Report Print Fathima Fathima in கால்பந்து
284Shares
284Shares
ibctamil.com

ரஷ்யாவில் நடக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் வருகிற ஜூன் 14ம் திகதி முதல் ஜூலை 15ந் திகதி வரை நடக்கிறது.

32 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்கள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒரு போஸ்டரில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் தலைகளை இருவர் அறுப்பது போன்று காட்டப்பட்டுள்ளது, அதில் மைதானம் உங்களது ரத்தத்தால் நிரப்பப்பட்டிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு போஸ்டரில், எங்களுக்கே வெற்றி என்பது போன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இதேபோன்று மெஸ்ஸியின் கண்களில் இருந்து ரத்தம் வருவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுவதாலேயே மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்