விளையாட்டுத் திருவிழா: உலகக் கிண்ண கால்பந்து குறித்து ஒரு பார்வை

Report Print Kabilan in கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷியாவில் வரும் ஜூன் 14ஆம் திகதி தொடங்கும் நிலையில், இந்த தொடருக்கான Count Down தொடங்கியுள்ளது.

ரஷியாவில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் தொடங்க ஒரு மாதமே உள்ளது. உலகிலேயே பெரிய விளையாட்டுத் திருவிழா பிஃபா கால்பந்து போட்டித் தொடர் ஆகும்.

ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடர், 21வது முறையாக நடக்கும் தொடராகும். இந்த தொடர், ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியை ரஷ்யா ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும். இறுதிப் போட்டியை தவிர, மற்ற போட்டிகள் ரஷ்யாவின் ஐரோப்பியக் கண்டப் பகுதியில் நடைபெறுகின்றன.

32 நாடுகள் பங்கேற்கும் இந்தப் தொடரில், போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெற்றது. ஏனைய 31 நாடுகள் தகுதிப் போட்டிகள் அடைப்படையில் தேர்வு செய்யப்பட்டன.

ஐஸ்லாந்து, பனாமா ஆகிய நாடுகள் முதன் முறையாக உலகக் கிண்ண தொடரில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன.

இந்த தொடர், மொத்தம் 11 நகரங்களில் 12 அரங்குகளில் நடைபெற உள்ளது. இவற்றில் 64 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இறுதிப்போட்டி மாஸ்கோவின் லூசினிக்கி அரங்கில் ஜூலை 15ஆம் திகதி நடைபெறும்.

இந்நிலையில், இந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அணிகளின் விபரம்

Group A: ரஷ்யா, உருகுவே, எகிப்து, சவுதி அரேபியா

Group B: போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஈரான், மொராக்கோ

Group C: பிரான்ஸ், பெரு, டென்மார்க், அவுஸ்திரேலியா

Group D: அர்ஜெண்டினா, குரோஷியா, ஐஸ்லாந்து, நைஜீரியா

Group E: பிரேசில், சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகா, செர்பியா

Group F: ஜேர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன், தென் கொரியா

Group G: பெல்ஜியம், இங்கிலாந்து, துனிஷியா, பனாமா

Group H: போலந்து, கொலம்பியா, செனகல், ஜப்பான்

உலகக் கிண்ண கால்பந்து தொடர்

கடந்த 1930 முதல் தொடர்ச்சியாக உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டித் தொடரை நடத்தி வருகிறது.

உலகப் போர் காரணமாக 1942, 1946ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெறவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் ஜேர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற்ற நாடுகள்

1930 - உருகுவே, மாண்டிவிடோ உருகுவே

1934 - இத்தாலி

1950 - உருகுவே, பிரேசில்

1954 - மேற்கு ஜேர்மனி, சுவிட்சர்லாந்து

1958 - பிரேசில், ஸ்வீடன்

1962 - பிரேசில், சிலி

1966 - இங்கிலாந்து

1970 - பிரேசில், மெக்சிகோ

1974 - மேற்கு ஜேர்மனி

1978 - அர்ஜெண்டினா

1982 - இத்தாலி, ஸ்பெயின்

1986 - அர்ஜெண்டினா, மெக்சிகோ

1990 - மேற்கு ஜேர்மனி, இத்தாலி

1994 - பிரேசில், அமெரிக்கா

1998 - பிரான்ஸ்

2002 - பிரேசில், ஜப்பான்

2006 - இத்தாலி, ஜேர்மனி

2010 - ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா

2014 - ஜேர்மனி, பிரேசில்

அதிக முறை பட்டம் வென்ற நாடுகள்

  • பிரேசில் - 5
  • ஜேர்மனி, இத்தாலி - 4
  • அர்ஜெண்டினா, உருகுவே - 2
  • இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் - 1

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்