பார்சிலோனா- ரியல் மாட்ரிட் போட்டி: டிராவில் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்

Report Print Kabilan in கால்பந்து

பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய எல் கிளாசிகோ போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

லா லிகா கால்பந்து லீக்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், பார்சிலோனா-ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்திற்கு எல் கிளாசிகோ என்று பெயர்.

இரண்டு முன்னணி அணிகள் மோதிய போட்டி என்பதால், இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

AFP

போட்டி துவங்கியதும் இரு அணி வீரர்களும் அனல் பறக்கும் ஆட்டத்தில் ஈடுபட்டனர். பார்சிலோனாவின் லூயிஸ் சுவாரஸ் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில், கார்னர் பகுதியில் இருந்து Pass செய்யப்பட்ட பந்தை கோலாக மாற்றினார்.

அதன் பிறகு, 14வது நிமிடத்திலேயே ரியல் மாட்ரிடின் நட்சத்திர வீரர் ரொனால்டோ பதில் கோல் அடித்தார். இந்நிலையில், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் பார்சிலோனாவின் செர்ஜி ரொபெர்ட்டோ Red Card பெற்று வெளியேறினார்.

இதன் காரணமாக இரண்டாவது பாதியில் பார்சிலோனா 10 வீரர்களுடன் விளையாடியது. எனினும், சொந்த மைதானம் என்பதால் அந்த அணி வீரர்கள், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் சிறப்பாக விளையாடினர்.

Reuters

இந்நிலையில், ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் மெஸ்ஸி அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, 72வது நிமிடத்தில் ரியல் மாட்ரிடின் பேலே பதில் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 2-2 என சமநிலைக்கு வந்தது. அதன் பிறகு நடந்த கடுமையான மோதலினால், இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 2-2 என்ற நிலையில் டிராவில் முடிந்தது.

Reuters
Getty

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers