மெய்சிலிர்க்க வைத்த ரொனால்டோவின் அற்புதமான கோல்: வைரலாகும் வீடியோ!

Report Print Kabilan in கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோல், கால்பந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.

இத்தாலியின் டியூரினில் ரியல் மாட்ரிட் - ஜுவெண்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 3வது நிமிடத்தில், ரியல் மேட்ரிட்டின் ரொனால்டோ கோல் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்தார்.

அதன் பின்னர், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் ‘Bycycle kick' முறையில் அட்டகாசமான கோல் அடித்தார். இந்த கோலைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

மேலும், மைதானத்தில் இருந்த ஜுவெண்டஸ் ரசிகர்களும் ரொனால்டோவின் இந்த அற்புதமான கோலுக்கு தங்களது பாராட்டைத் தெரிவித்தனர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் ரியல் மேட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன், இந்த ஆட்டத்தில் கோல்கள் அடித்ததன் மூலமாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

இந்நிலையில், ரொனால்டோவின் மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கோல் வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக பரவி வருகிறது.

AFP

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்