உலகக் கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்க இங்கிலாந்து முடிவு: காரணம் என்ன?

Report Print Kabilan in கால்பந்து

உளவாளி மீதான ரசாயன தாக்குதல் காரணமாக, ரஷ்யாவில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரை, இங்கிலாந்து புறக்கணிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் முதல் முறையாக வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில், உளவாளி மீதான ரசாயன தாக்குதல் காரணமாக இங்கிலாந்து இந்த தொடரை புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், இங்கிலாந்தின் முடிவால் கால்பந்து தொடருக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

எனினும், இங்கிலாந்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஜேர்மனி, ஸ்பெயின் நாடுகளும் உலகக் கிண்ண தொடரை புறக்கணிக்க போவதாக வெளியான தகவலால் ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது.

மேலும், விளையாட்டில் அரசியல் கூடாது என்று ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers