டோனி மற்றும் கோஹ்லி இடையே மோதல்: எதில் தெரியுமா?

Report Print Kabilan in கால்பந்து

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதியில், டோனியின் சென்னையின் எப்சி அணி மற்றும் கோஹ்லியின் எப்சி கோவா அணியும் மோத உள்ளன.

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது.

பெங்களூரு எப்சி, நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் புனே சிட்டி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், நேற்று ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற, கோஹ்லியின் எப்சி கோவா அணியும் தற்போது அரையிறுதியில் நுழைந்துள்ளது.

அனைத்து லீக் ஆட்டங்களும் முடிந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் வரும் 7ஆம் திகதி தொடங்க உள்ளது.

40 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு எப்சி அணி, நான்காவது இடத்தில் உள்ள புனே சிட்டி அணியுடன் வரும் 7 மற்றும் 11ஆம் திகதி நடக்கும் போட்டியில் மோத உள்ளது.

அத்துடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டோனியின் சென்னை எப்சி அணி, 3வது இடத்தில் உள்ள கோஹ்லியின் எப்சி கோவா அணியுடன், வரும் 10 மற்றும் 13ஆம் திகதிகளில் நடக்கும் ஆட்டங்களில் மோத உள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்