மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரை விட்ட வீரர்கள்

Report Print Athavan in கால்பந்து

உலக அளவில் அதிகளவு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்தாட்டம் திகழ்ந்தாலும் மறுபக்கம் அதிக ஆபத்துகள் நிறைந்த விளையாட்டாகவும் விளங்குகிறது.

விளையாட்டின் போது ஒருவருக்கு ஒருவர் மூர்க்கத்தனமாக விளையாடுவதால் இவ்விளையாட்டில் உடம்பின் எப்பகுதியில் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம்.

சில நேரங்களில் இவ்வாறு ஏற்பட்ட படுகாயங்கள் பின்னாட்களில் வீரர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்துவதோடு அல்லாமல் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு ஏன் சில வீரரர்களுக்கு களத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தும் உள்ளனர், இப்படி கால்பந்தாட்டதால் உயிரைவிட்ட வீரர்களின் விவரத்தை காண்போம்:

Hrvoje Ćustićகுரோஷியன் கால்பந்து வீரர், மிட்பீல்டராக விளையாடி வந்தார். ஸ்டாண்டிலிருந்து விளையாட்டு மைதானத்தை பிரிக்கும் 3 மீட்டர் உயரம் உள்ள கான்கிரீட் சுவரில் எதிர்பாராத விதமாக மோதி தலையில் காயம் ஏற்பட்டதால் பல அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அறுவைசிகிச்சைக்கு பின் கோமா நிலைக்கு சென்றார், சிறிது நாட்களில் அவரின் உடல் வெப்பம் அதிகரித்து உயர்காய்ச்சலால் உடல்நிலை மோசமடைந்தது, 2008ம் ஆண்டு மூளை செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில் காலமானார்.

Antonio Puerta

2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று கால்பந்து விளையாட்டின் போது, பெனால்டி பகுதியில் நின்றிருந்த பௌர்டா ஆட்டத்தின் பாதியில் திடீரென சுயநினைவிழந்து விழுந்தார்.

பின் நினைவு திரும்பியவராக உடனடியாக உடைமாற்றும் அழைத்து செல்லப்பட்டவர் அங்கு மீண்டும் நினைவிழந்தார், எனவே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அரித்மோகென்சிக் வென்ட்ரிக்ளஸ் டிஸ்லளாசியா எனப்படும் பரம்பரை நோய்க்கு நீண்ட காலமாக மருந்து எடுத்து வருவதாகவும், இதனால் உறுப்புகள் செயலிழந்து மீள முடியாத மூளை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

22 வயதில் அவர் மரணத்தை தழுவும் தருவாயில் அவரின் முதல் குழந்தை பிறந்தது.

Paulo Sérgio Oliveira da Silva

2004 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று, 60 நிமிடங்கள் தாண்டி சில்வா விளையாடிகொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதயம் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

30 வயதான சில்வா இறக்கும் போது, இதயம் 600 கிராம் எடை இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது இதயத்தின் சாதாரண எடையைகாட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.

Miklos Feher

2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஃபெர்ர் பங்கேற்ற போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, போட்டியின் போது ஃபெர்ர் திடீரென பின்புறமாக வளைந்து, வலியால் துடித்து சுயநினைவிழந்தார்.

ஆம்புலன்ஸ் வரும்வரை இரு அணிகளையும் சேர்ந்த மருத்துவ குழுக்கள் அவருக்கு முதலுதவி அளித்தது, அப்போது மைதானத்தில் வீரர்கள் கண்ணீர் சிந்திய காட்சி நேரடியாக ஒளிபரப்பானது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டாலும் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

Phil O’Donnell

ஸ்காட்டிஷ் கால்பந்து வீரர் ஆவார், அவர் ஸ்காட்டிஷ் பிஎஃப்ஏ யங் பிளேயர் ஆஃப் தி இயர் விருதும் பெற்றுள்ளார்.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, விளையாட்டின் போது போட்டியில் இருந்து வெளியேறியவர் உடை மாற்றும் அறையில் மயங்கி விழுந்தார்.

அங்கே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் மாலையே உயிரிழந்தார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்