மீண்டும் லிவர்பூல் அணியின் வளத்தை சூறையாடிய பார்சிலோனா

Report Print Samaran Samaran in கால்பந்து

ஜனவரி மாதத்திற்கான வீரர்கள் மாற்று சந்தையில் பார்சிலோனா அணி லிவர்பூல் அணியின் நட்சத்திரவீரர் கொரினோவை 160 மில்லியன் யூரோ தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

நடப்பு சீசனில் லிவர்பூல் அணிக்காக சிறந்த முறையில் ஆடிவரும் 10 ஆம் இலக்க வீரர் கொரினோவை வாங்கியதன் மூலம் தனது பவமான முன்கள ஆட்டத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது பார்சிலோனா.

ஏற்கனேவ மாஸ்கரானோ சுவாரஸ் என சிறப்பாக செயற்படும் வீரர்களை லிவர்பூல் இடம் இருந்து பறித்த பார்சிலோனா தற்போது அந்த வரிசையில் கொரினோவையும் இணைத்துள்ளது.

இந்த சீசனில் அனைத்து தொடர்களிலும் முன்னிலையில் உள்ள பார்சிலோனா தற்போது மேலும் பலமடைந்துள்ளது.

அத்துடன் கொரினோவின் 10 ஆம் இலக்க சீருடையை எரித்து லிவர்பூல் ரசிகர்கள் அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்