தேசிய மட்ட கால்பந்தாட்டம்: போராடி வென்றது மகாஜனக் கல்லூரி பெண்கள் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

இலங்கைப் பாடசாலைகள் கால்பந்தாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட 18 வய துப்பிரிவு பெண்களுக்கான தொடரில், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்ட மொன்றில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து குருநாகல் மலியதேவ பாலிக வித்தியாலய அணி மோதியது. இரண்டு அணிகளும் சிறந்த போராட் டத்தை வெளிப்படுத்தின. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி.

இரண்டாவது பாதியின் 5ஆவது நிமிடத்தில் மகாஜனக் கல்லூரியின் முதலாவது கோலைப் பதிவுசெய்தார் சானு. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருக்கையில் மலியதேவ பாலிக வீராங்கனை கயத்திரி தனது அணிக்கான முதலாவது கோலைப் பதிவுசெய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஓர் கோலைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 3:2 என்ற கோல் கணக்கில் மகாஜனக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்