தங்க காலணி விருது பெற்ற மெஸ்ஸி

Report Print Kabilan in கால்பந்து
140Shares

ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டங்களில் கடந்த சீசனில் அதிக கோல்கள் அடித்ததற்காக பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தங்க காலணி விருது பெற்றுள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி, கிளப் அணியான பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார்.

ஐரோப்பிய கால்பந்து லீக் ஆட்டங்களில் கடந்த சீசனில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் மெஸ்ஸி.

இந்நிலையில் இச்சாதனையை பாராட்டி மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டது. ஸ்பெயினின் கேம்ப் நோ நகரில், பார்சிலோனா மற்றும் டிபோர்டிவோ லா கொருனா அணிகள் லா லிகா தொடரில் மோதின.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக மெஸ்ஸிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை என்றாலும், பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்