லா லிகா தொடர்: தொடரும் பார்சிலோனாவின் ஆதிக்கம்

Report Print Samaran Samaran in கால்பந்து
50Shares
50Shares
ibctamil.com

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து அணிகளுக்கு இடையில் 'லா லிகா' கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்று முந்தினம் இடம்பெற்ற போட்டியில் முன்னணி அணிகளான பார்சிலோனா– வில்லாரியல் அணிகள் மோதின.

சொந்த மைதானத்தில் விளையாடிய வில்லாரியல் பார்சிலோனா அணிக்கு நெருக்கடி கொடுத்தாலும் இறுதியில் கடுமையான தாக்குதல் ஆட்டத்தை கைக்கொண்ட பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா தொடர்ந்து தொடரில் முன்னிலை பெற்று வருகிறது. இதுவரை பார்சிலோனா 15 போட்டிகளில் 12 வெற்றியுடன் 39 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

இவர்களுக்கு கடுமையான போட்டியாக திகழும் ரொனால்டோவின் ரியல் மாட்ரிட் அணி 31 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்