ஐந்தாவது முறையாக சிறந்த வீரர் விருதை பெற்ற ரொனால்டோ

Report Print Kabilan in கால்பந்து

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை, போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கைப்பற்றியுள்ளார்.

கடந்த 1956ஆம் ஆண்டு முதல் சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருது பிரான்ஸ் கால்பந்து பத்திரிக்கை சார்பில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர் பட்டியலில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கலின் ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர் உட்பட 30 பேர் இடம் பிடித்திருந்தனர்.

பாரிஸில் நடந்த இதற்கான விழாவில், 32 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ விருதினை தட்டிச் சென்றார்.

இதன் மூலம், இந்த விருதினை அதிக முறை கைப்பற்றிய, மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ. மேலும், இது அவருக்கு ஐந்தாவது விருதாகும். மெஸ்ஸி மற்றும் நெய்மர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்