புதிய சாதனை படைத்த ரொனால்டோ

Report Print Kabilan in கால்பந்து
258Shares

போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு சீசனின் அனைத்து குரூப் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார் ரொனால்டோ.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் 3 - 2 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணிக்கு எதிராக, ரியல் மேட்ரிட் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஒரு கோல் அடித்ததன் மூலமாக, ஒரு சீசனின் அனைத்து குரூப் போட்டிகளிலும் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். நடப்பு சீசனில் இதுவரை அவர் 9 கோல்கள் அடித்துள்ளார்.

மேலும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும், 114 கோல்கள் அடித்து ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 97 கோல்கள் அடித்த லையோனல் மெஸ்ஸி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்