கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை

Report Print Kabilan in கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ஒரு சீசனில், அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வரும் ரொனால்டோ, நேற்று முன்தினம் சைப்ரஸ் நாட்டின் அபோயல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்ததின் மூலம், சாம்பியன்ஸ் லீக் தொடரின் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் மட்டும் ரொனால்டோ 18 கோல்கள் அடித்துள்ளார். மேலும், அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளார்.

இந்நிலையில், ரியல் மாட்ரிட் 6-0 என்ற கோல் கணக்கில் அபோயல் அணியை வென்றதன் மூலமாக, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்