ஐஎஸ்எல் கால்பந்து: போராடி தோற்றது சென்னை அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4 வது சீசன் கேரளாவின் கொச்சியில் கடந்த 17 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கோலாகலமாக தொடங்கிய தொடக்க விழாவில் சச்சின், பாலிவுட் நடிகர் சல்மான் கான், மலையாள நடிகர் மம்மூட்டி, முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் தோனி உரிமையாளராக இருக்கும் சென்னை அணியும் கோலி உரிமையாளராக உள்ள கோவா அணியும் மோதின. இந்த சீசனில் சென்னையில் நடக்கும் முதல் போட்டி இது என்பதால் இதை காண ரசிகர்கள் குவிந்தனர்.

போட்டியின் முதல் பாதியிலேயே கோவா அணி கோல் அடிக்கத் தொடங்கியதால் ஆட்டம் சென்னை அணியிடமிருந்து கை நழுவி செல்லத் தொடங்கியது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சுதாரித்துக் கொண்டு ஆடிய சென்னை அணி ஆட்டநேர முடிவில் 2 கோல்களை அடித்தது. இருப்பினும், கோவா அணி 3 கோல்கள் அடித்திருந்ததால் அந்த அணி வெற்றியைத் தன்வசமாக்கியது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்