தகுதி பெறுவதற்கு முன்பே ஹொட்டல் அறைகளை முன்பதிவு செய்த இத்தாலி

Report Print Kabilan in கால்பந்து

உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுவிடும் நம்பிக்கையில் முன்கூட்டியே ஹொட்டல் அறைகளை முன்பதிவு செய்து இத்தாலி அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. போட்டியை நடத்தும் அணியான ரஷ்யா நேரடியாகவே தொடருக்கு தகுதி பெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் பங்கேற்க முடியும்.

இந்நிலையில், நான்கு முறை உலகக் கிண்ணத்தினைக் கைப்பற்றிய இத்தாலி அணி, எப்படியும் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில், தகுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே ஹொட்டல் அறைகளை புக் செய்துள்ளனர்.

இத்தாலி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக, இத்தாலி கால்பந்து பெடரேசன் சார்பில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சுவீடன் அணியுடனான முதல் லெக் போட்டியில் தோல்வியும், இரண்டாவது லெக் போட்டியில் டிராவும் செய்ததால், 1-0 என்ற கணக்கில் சுவீடன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 60 ஆண்டுகளில், இத்தாலி அணி உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறாமல் போவது இதுவே முதல்முறையாகும்.

எனவே இத்தாலி புக் செய்துள்ள அறைகளை டென்மார்க் அணி பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...