கொடி கட்டி பறந்த இத்தாலி அணிக்கு அதிர்ச்சி: மைதானத்தில் கண்ணீர் விட்ட வீரர்கள்

Report Print Santhan in கால்பந்து
388Shares
388Shares
ibctamil.com

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண்ம் கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி பங்கேற்க முடியாமல் போனதால், வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

ரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறவிக்கும் உலகக்கிண்ணம் கால்பந்து தொடரின் தகுதிப் போட்டிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சேன் சிரோ மைதானத்தில் இத்தாலி மற்றும் சுவீடன் அணிகள் மோதின.

இப்போட்டியில் நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால், போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதனால், முந்தைய போட்டியில் இத்தாலி மற்றும் சுவீடன் மோதிய ஆட்டத்தில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றிருந்தது.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 1-0 என சுவீடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 2018-ஆம் ஆண்டு உலககிண்ணம் தொடருக்கு சுவீடன் தகுதி பெற்றது, இதே வேளை இத்தாலி அணி உலககிண்ணம் தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

1934, 1938, 1982, 2006 என இத்தாலி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி 1958-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலககிண்ணம் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

போட்டியின் முடிவில் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேற முடியாமல் அந்த இடத்திலே கண்ணீர் விட்டு அழுதனர்.

இந்த உலகக்கிண்ணம் தொடரோடு இத்தாலி அணியின் நட்சத்திர வீரர் பபான் ஓய்வு பெறுகிறார்.

அவர் கூறுகையில், இத்தாலி ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த தோல்வி இத்தாலி வீரர்கள் ஒவ்வொருவரையும் சாரும்.

எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும், இத்தாலி அணிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்