கடைசி ஒரு நிமிடத்திற்கு முன்னர் கோல் அடித்த ரொனால்டோ: தாக்கிக் கொண்ட வீரர்கள்

Report Print Santhan in கால்பந்து

லா லீக் தொடரில் ரியல் மெட்ரிக் அணிக்கு கடைசி கட்டத்தில் இரண்டு கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார் ரொனால்டோ.

தற்போது லா லீக் தொடர் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் ரியல் மேட்ரிட் அணியும் லால் பால்மாஸ் அணிகளும் மோதின.

இப்போட்டியின் ஆரம்பத்தில் லால் பால்மாஸ் அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால் பால்மாஸ் அணி வெற்றி உறுதி என்ற கட்டத்தில் விளையாடி வந்தனர்.

ஆனால் லால் பால்மாஸ் அணியின் கனவை ரியல் மேட்ரிக் வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோ பறித்தார். ஆட்டத்தின் 86 வது நிமிடத்தில் ஒரு பெனால்டி கோலும், 89 வது நிமிடத்தில் ஒரு அசத்தல் கோலும் அடித்து ரியல் மேட்ரிக் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

இப்போட்டியின் போது ரியல் மாட்ரிக் அணி வீரர் பாலி எதிரணி வீரரான விராவை தன் கையை வைத்து தள்ளினார். இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது.

அதன் பின் நடுவர் பாலிக்கு மஞ்சள் கார்டு காண்பித்து எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments