உலகளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் யார் தெரியுமா?

Report Print Arbin Arbin in கால்பந்து

அர்ஜெண்டினா வீரர் கார்லோஸ் டெவெஸ் (Carlos Tevez) தான் தற்போதைய நிலவரப்படி அதிக ஊதியம் பெறுபவராக திகழ்கிறார்.

சீன கால்பந்து கிளப்பான சாங்காய் சென்ஹுவாவுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் கார்லோஸ். இதற்காக அவருக்கு ஒரு சீசனுக்கு 40 மில்லியன் டொலர் அதாவது இலங்கை மதிப்பில் ரூ.599 கோடி (ரூ.5990600000.00) சம்பளம் வழங்கப்படவுள்ளது.

அர்ஜெண்டினாவின் போகா ஜூனியர்ஸ் அணியிலிருந்து கார்லோஸ் தற்போது மாறியுள்ளார். இதையடுத்து கால்பந்து உலகில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கார்லோஸ்.

குறித்த கால்பந்து குழுமத்துடன் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் கார்லோஸுக்கு அந்த குழுமம் நிமிடத்திற்கு 80 டொலர் வரை ஊதியமாக வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments