ரொனால்டோவிற்கு வருத்தத்தை தரும் விஷயம் என்னவென்று தெரியுமா?

Report Print Amirah in கால்பந்து

தான் உண்மையாக காதலித்தாலும் தன்னை யாரும் நம்புவது இல்லை என்று நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பல பெண் தோழிகள் உள்ளனர்.

ற்போது ரொனால்டோ ரஷியாவை சேர்ந்த பிரபல மாடல் அழகி இரியானா ஷாயக்குடனும், இத்தாலியை சேர்ந்த எலிசா டி பனிசிஸ்சுடனும் நெருக்கமாக பழகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்அவர் தொலைக்காட்சி ஒன்றிட்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், ‘‘பெரும்பாலும் பெண்களின் இதயத்தை பார்த்தே நான் காதலிக்கிறேன். ஆனால் யாரும் என்னை புரிந்து கொள்வது இல்லை. நான் அவர்களுக்கு உண்மையாக இருந்தாலும் அவர்கள் என்னை நம்புவது இல்லை’’ என்று தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் தனது மகன் குறித்து கூறுகையில், எனது மகன் பிறந்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி. அவன் என்னைப் போலவே இருக்கிறான்.

வீட்டில் இருக்கும் சமயத்தில் எப்போதும் என் மார்பின் மீதுதான் உறங்குகிறான். கால்பந்து போட்டிக்காக அவனை விட்டு பிரிந்து செல்வதுதான் எனக்கு கடினமான விஷயமாக இருக்கிறது என்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த குழந்தைக்கு யார் தாய் என்பது இன்று வரை உலகுக்கு தெரியாது. அந்த குழந்தையை ரொனால்டோவின் சகோதரியே வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments