கேள்விக்குறியாகியது மெஸ்ஸியின் உலக கிண்ண கனவு...!

Report Print Murali Murali in கால்பந்து

2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள கால் பந்து உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டிகளில் அர்ஜென்டினா அணி தொடர்ந்தும் தடுமாறி வருகிறது.

இந்த வாரம் தென்னமெரிக்கா தகுதி சுற்றின் 11ஆவது சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் முக்கிய போட்டியாக பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் அர்ஜென்டினா அணியை 3-௦ என்ற கோல் வீழ்த்தியது பிரேசில் அணி. இந்த தோல்வியுடன் அர்ஜென்டினா அணி 11 போட்டிகளில் 4 வெற்றி 4 சமநிலை 3 தோல்வி பெற்று 16 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் உள்ளது.

தென்னமெரிக்கா தகுதி சுற்று போட்டிகளில் இருந்து 4 அணிகள் நேரடியாக உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெறும்.

5வது அணி Oceania Football Confederation தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெறும் அணியுடன் மோதி அப்போட்டியில் வெற்றி பெறின் உலக கிண்ண போட்டிகளுக்குள் பங்கேற்க முடியும்.

தற்போதைய நிலைமையில் அர்ஜென்டினா அணி 6வது இடத்தில் இருக்கின்றது. எனவே, அர்ஜென்டினா அணியின் உலக கிண்ண தகுதி என்பது தற்போது வரையில் கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும், இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இனிவரும் போட்டிகளில் ஆர்ஜென்டினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலக கிண்ண போட்டிகளுக்கு தகுதி பெற முடியும்.

எவ்வாறாயினும, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2018ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்பிலேயே தனது ஓய்வை அறிவித்த பின்னரும் மீண்டு அணியில் இணைந்து கொண்டார்.

இவ்வாறான நிலையில், அர்ஜென்டினா அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments