பெல்போர்ட் சாதுர்யமாக அடித்த கோலினால் வென்றது கேரளா

Report Print Amirah in கால்பந்து

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரை இறுதியின் 2-வது ஆட்டம் நேற்று கொச்சியில் நடைபெற்றுள்ளது.

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் - டெல்லி டைன மோஸ் அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப் படவில்லை.

முதல் நிமிடத்தில் டெல்லி அணிக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்த அணியின் வீரர் லீவிஸ் பந்தை கம்பத்துக்கு வெளியே அடித்து ஏமாற்றமளித்தார்.

அடுத்த நிமிடத்தில் கேரளா அணிக்கும் இதேபோன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை வினீத் தவரவிட்டார்.

65-வது நிமிடத்தில் கேரளா முதல் கோலை அடித்தது. நடுகள பகுதியில் ஹெங்பர்ட்டிடம் இருந்து பந்தை பெற்ற பெல்போர்ட் எதிரணி வீரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை மெதுவாக நகர்த்தி சென்றே சாதுர்யமாக இந்த கோலை அடிக்க கேரள அணி 1-0 என முன்னிலை பெற்றது. டெல்லி அணியால் கடைசி வரை போராடியும் பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

முடிவில் கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தங்களது 2-வது கட்ட அரை இறுதியில் வரும் 14-ம் தேதி மோதுகின்றன.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments