பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனா அணியின் வெற்றியை தடுத்த ரியல் மாட்ரிட் கேப்டன்

Report Print Jubilee Jubilee in கால்பந்து

லா லிகா லீக் போட்டியில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று முன்தினம் ஸ்பெயினில் உள்ள கேம்ப் நவு மைதானத்தில் மோதின.

சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கிய பார்சிலோனா அணி தொடக்க முதலே சிறப்பாக செயல்பட்டது.

அதேசமயம் 6 புள்ளிகள் முன்னிலையில் இருக்கும் ரியல் மாட்ரிட் புள்ளிகளை விட்டுக் கொடுக்க கூடாது என்று சவால் கொடுத்து விளையாடியது.

இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. ஆனால் 2வது பாதியில் பார்சிலோனா அணியின் கை ஓங்கியது.

53வது நிமிடத்தில் நெய்மர் அடித்த ப்ரீ ஹிக்கை சுவாரஸ் தலையால் முட்டி அதனை கோலாக்கினார். இதனால் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.

இதன் பிறகு ரியல் மாட்ரிட் அணி கோல் அடிக்க முயன்றும், பார்சிலோனா தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பலனில்லாமல் போனது.

ஆட்டம் கடைசி நிலையை எட்டியதால் பார்சிலோனா தான் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் 90வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் லூகா மோட்ரிக் ப்ரீ ஹிக் மூலம் பந்தை தூக்கி அடித்தார். அதை அந்த அணியின் தலைவர் செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

கடைசி நிமிடத்தில் கோல் அடித்து பார்சிலோனாவின் வெற்றியை தடுத்து நிறுத்தினார் ரமோஸ். இதனால் இந்த போட்டியானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 6 புள்ளிகள் முன்னிலையுடன் லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments