உலகின் "டாப்- 5" நட்சத்திரங்கள்- தனித்து வந்தார் ரொனால்டோ

Report Print Abhimanyu in கால்பந்து

பிரபல ஆங்கில ஊடகமொன்று சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பின் தொடரப்படும் நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டது.

இந்த 'டாப்-5' நட்சத்திரங்களின் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பேஸ்புக், டுவிட்டர், இண்ஸ்டாகிராம் என மொத்தமாக 238 மில்லியன் மக்கள் பின் தொடருகின்றனர். இதன் மூலமே இப்பட்டியலில் ரொனால்டோ இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் காணப்படும் ஒரே ஒரு ஆண் என்ற பெருமையையும் தன்வசபடுத்தி கொண்டார் ரொனால்டோ.

இப்பட்டியலில் அமெரிக்க பாடகி “டெய்லர் ஸ்விப்ட்” முதல் இடத்திலும் (246 மில்லியன்) உள்ளார். மற்றொரு அமெரிக்க பாடகி “கேட் பெர்ரி” (219 மில்லியன்) மூன்றாவது இடத்திலும், “செலினா கோமஸ்” (205 மில்லியன்) நான்காவது இடத்திலும், பார்பேரிய பாடகர் “ரிஹானா” (190 மில்லியன்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments