சொந்த மண்ணில் பட்டையை கிளப்பிய இந்தியா! ஆராவாரமாக கொண்டாடிய ரசிகர்கள்!

Report Print Basu in கால்பந்து

சொந்த மண்ணில் நடந்த சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய 4-1 என்ற கோல் கணக்கில் வலிமையான பியுர்டோ ரிகோ அணியை வீழ்த்தி அசத்தியது.

மும்பையில் நடந்த சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் உலகத் தரவரிசையில் 152வது இடத்தில் உள்ள இந்திய, 114 வது இடத்தில் உள்ள பியுர்டே ரிகோவுடன் மோதியது.

போட்டியின் 8வது நிமிடத்தில் பியுர்டோ ரிகோ அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்நாட்டு வீரர் சான்செஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் பியுர்டோ ரிகோ அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 18வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் நாரயணன் தாஸ் கோல் போட்டார். தொடர்ந்து 23வது நிமிடத்தில் இந்திய அணித்தலைவர் சுனில் செத்ரி அசத்தல் கோல் அடித்தார்.

மீண்டும் 34வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரரான ஜீஜே கோல் போட்டார். முதல் பாதியில் இந்திய அணி 3-1 என முன்னிலை பெற்றது. பின் தொடங்கிய இரண்டாவது பாதியின் 56வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜாக்கிசந்த் சிங் கோல் அடித்தார்.

இறுதி வரை போராடிய பியுர்டே ரிகோ அணியால் மேலும் ஒரு கோல் கூட போட முடியவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

மும்பையில் 61 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் முதல் சர்வதேச போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். போட்டி முடிந்த பின் இந்திய அணித்தலைவர் மற்றும் நட்சத்திர வீரர் சுனில் செத்ரி, ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது ரசிகர்கள் சுனில் செத்ரி, சுனில் செத்ரி என ஆராவாரம் செய்து இந்திய கொடியை அசைத்து வெற்றியை கொண்டாடினர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments