மெஸ்ஸி, "கடி மன்னன்" சுவராஸூடன் தொடர்ந்து கலக்கப் போகும் நெய்மர்

Report Print Jubilee Jubilee in கால்பந்து
மெஸ்ஸி,

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை பார்சிலோனா கிளப் அணி மேலும் 5 ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

நெய்மரை கடந்த சில நாட்களாக மான்செஸ்டர் யுனைடெட், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிகள் வாங்க முயற்சி செய்து வந்தன.

நெய்மரும் பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

ஆனால் பார்சிலோனா நெய்மரை இழக்க விரும்பவில்லை. இதனால் அவருக்கு அதிகபட்ச தொகையாக 167 மில்லியன் பவுண்டுகள் விலை நிர்ணயித்தது. இறுதியாக 209 மில்லியனாக உயர்த்தியது.

இவரது பதவிக்காலம் 2018ம் ஆண்டு நிறைவடைகிறது. இதற்கிடையில் தற்போது 2021ம் ஆண்டு வரை அவரை ஒப்பந்தம் செய்துள்ளது பார்சிலோனா.

மேலும், 5 ஆண்டுகள் பார்சிலோனா அணியில் ஆடுவதற்கு நெய்மர் ஒப்பந்தம் செய்ய தயாராகியுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லியோனல் மெஸ்ஸி மற்றும் உருகுவேயின், 'கடி மன்னன்' லூயிஸ் சுவராஸ் ஆகிய முக்கிய வீரர்களும் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார்கள். இவர்களுடன் இணைந்து தொடர்ந்து கலக்க தயாராகிவிட்டார் நெய்மர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments