ஐஸ்லாந்து வீரர்கள் குறுகிய மனப்பான்மை கொண்ட வீரர்கள் என்று போர்த்துக்கல் அணியின் தலைவர் ரொனால்டோ புலம்பியுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என ஐஸ்லாந்து "டிரா" செய்தது.
இந்நிலையில் ஐஸ்லாந்து வீரர்கள் அனைவரும் எங்களின் கோல் வாய்ப்பை தடுப்பதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டியதாக ரொனால்டோ ஆதங்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஐஸ்லாந்து வீரர்கள் ஒரு கோல் அடித்தனர். அதன் பிறகு கூடுதல் கோல் அடிக்க முயற்சிக்கவில்லை. மாறாக எங்களின் கோல் வாய்ப்பை தடுப்பதில் மட்டுமே கவனமாக இருந்தனர்.
கோல் போஸ்ட்டுக்கு முன் ஒரு பேருந்தை நிறுத்தியதை போல் உணர்ந்தோம். அவர்கள் தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இவர்களின் செயல்பாட்டை பார்க்கும் போது குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவே உள்ளனர் என்று கூறியுள்ளார்.