ரஷ்யா தோல்வி: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

Report Print Jubilee Jubilee in கால்பந்து
ரஷ்யா தோல்வி: அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்
433Shares

ஐரோப்பிய கால்பந்து தொடரில் அல்பேனியா அணியை 2-0 என வீழ்த்திய பிரான்ஸ் “ரவுண்ட்-16” சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிரான்சில் ஐரோப்பிய கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் மார்செல்லியில் நடந்த “ஏ” பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ், அல்பேனியா அணிகள் மோதின.

முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் வாய்ப்பை வீணாக்கினர். போட்டியின் 90வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராமி தந்த பாசை தலையால் முட்டி கிரிசிமான் கோல் அடித்தார்.

அதேபோல் ஆண்ட்ரி தந்த பந்தை டிமிட்ரி பாயெட் கோலாக்கினார். எதிரணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே ருமேனியா அணியை வீழ்த்தியிருந்த பிரான்ஸ். இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றான “ரவுண்ட்-16” சுற்றுக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து, ருமேனியா அணிகள் மோதின. இந்தப் போட்டி 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இதேபோல் "பி" பிரிவில் நடந்த போட்டியில் ரஷ்யா, சுலோவாகியா அணிகள் மோதின. ஆதிக்கம் செலுத்திய சுலோவாகியா 2-1 என ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments