பெல்ஜியத்தை விழிபிதுங்க வைத்தது இத்தாலி

Report Print Jubilee Jubilee in கால்பந்து
பெல்ஜியத்தை விழிபிதுங்க வைத்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

பிரான்சில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் “இ” பிரிவில் இத்தாலி-பெல்ஜியம் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு இம்மானுவேல் ஜியாசெரினி முதல் கோலை அடித்தார்.

பதில் கோல் அடிக்க பெல்ஜியம் அதிகமாக முயன்ற நிலையில், முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றது.

பின்னர் தொடங்கிய 2வது பாதியிலும் இத்தாலி அணியே ஆதிக்கம் செலுத்தியது. 93வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிராசியானோ பெல்லே 2வது கோலை அடித்தார்.

ஆன்பால் பெல்ஜியம் அணியால் கடைசி வரை பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து குடியரசு- சுவீடன் அணிகள் மோதின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

அதேபோல் ’டி’ பிரிவில் நடந்தப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments