ஊதா நிற உணவுகளை அதிகளவில் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்!!!

Report Print Nalini in உணவு
378Shares

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு என்பது போல், ஊதா நிறத்தில் உள்ள உணவுப் பொருட்கள் சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்வை கொடுக்கின்றன.

ஊதா நிறத்தில் இருக்கக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, நோய்களில் இருந்து நம்மை காக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணமாகும்.

அத்திப்பழம்

பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்த கூடிய பழம் தான் அத்திப்பழம். இது ரத்தசோகை, எதிர்ப்பு சக்தி குறைபாடு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடியவை. எனவே, இதனை தினமும் காலை வேளையில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே நோய்கள் நம்மை கிட்ட நெருங்காது.

கத்தரிக்காய்

கத்தரிக்காயில் வைட்டமின் கே, சி, பி6, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இதில் இருக்கின்றன. எனவே கத்திரிக்காய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.

நாவல்பழம்

நாவல்பழம் பல நன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமாம். எனவே தினமும் நாவலை பழத்தை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

வெங்காயம்

அடர்ந்த ஊதா நிறத்தில் இருக்கக் கூடிய வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தி, பல நன்மைகளை பெற்று விடலாம். இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கும். எனவே இது இதயம் சார்ந்த நோய்களை தடுக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்.

திராட்சை

அடர்ந்த நீல நிறத்தில் இருக்கக் கூடிய திராட்சையை சாப்பிடுவதன் மூலம் உள் உறுப்புகளில் வீக்கமோ, பாதிப்போ ஏற்படாது. அத்துடன் எதிர்ப்பு சக்தியை கூட்டி, நோய்களை நெருங்க விடாமல் தடுக்கும். மேலும் செரிமான கோளாறுகளையும் சரி செய்ய வேண்டும்.

முட்டைகோஸ்

ஊதா நிற முட்டைகோஸ் பல நன்மைகளை கொண்டவை.. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் கூடாமல் இருக்குமாம். மேலும் உடலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தையும் இது சரி செய்யுமாம்.

ப்ளூபெரி

ப்ளூபெரியில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் உள்ளது. மேலும் ஜின்க், வைட்டமின் எ, சி, கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த ஊதா நிற பழம், ஞாபக மறதி நோயாளிகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. அத்துடன் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

கேரட்

ஊதா நிற கேரட் அதிக எதிர்ப்பு சக்தியை தரவல்லது. அத்துடன் ரத்த ஓட்டத்தையும் சமமான அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

முள்ளங்கி

ஊதா முள்ளங்கி வயிறு மற்றும் கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்றி, நீண்ட நாட்கள் நோய்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கும்.

பிளம்ஸ்

ஊதா நிறத்தில் இருக்கும் பிளம்ஸ் பழம் அதிக அளவு நார்ச்சத்து கொண்டது. எனவே உடல் எடையை இது வெகுவாக குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கண்களுக்கும் பயனை அளிக்குமாம்.

அஸ்பாரகஸ்

மூலிகைத்தன்மை நிறைந்த அஸ்பாரகஸ் உடலுக்கு முழு சக்தியை தரும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ் மெட்டபாலிசத்தை அதிகரிக்கக் கூடுமாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்