இதயத்தை பலமாக வைத்து கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

Report Print Nalini in உணவு
200Shares

இதய நோய் விரைவில் வருகிறது என்ற காரணத்திற்காக, தற்போது பலரும் உணவில் எண்ணெய் சேர்ப்பதை தவிர்ப்பதுடன், இறைச்சிகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கின்றனர்.

ஆனால் இப்படி தவிர்த்தால் மட்டும் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான பாதுகாப்பு கிடைக்குமா என்ன?

நிச்சயம் இல்லை. கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை தவிர்ப்பதோடு, உடலின் முக்கிய உறுப்புக்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும் ஒருசில உணவுகளையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

இங்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து அவற்றை தவறாமல் உணவில் சேர்த்து, இதயத்தை நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இதற்காக மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை. சில இயற்கை உணவுகளை தினசரி எடுத்து கொண்டாலே போதுமானது.

அந்தவகையில் வைட்டமின் இ அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • வேர்க்கடலை இதய நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும். எனவே அன்றாட உணவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்ப்பதன் மூலம் வைட்டமின் இ பெறமுடியும்.
  • உடல் மிக சோர்வாக இருக்கிறது. உடனடியாக ஆற்றல் வேண்டுமென்றால் தினமும் 8 பாதாமை நீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிட்டாலே போதுமாம். தினம் 5 முதல் 8 வரை எடுத்துகொண்டால் உடலுக்கு வேண்டிய வைட்டமின் இ நிறைவாக கிடைத்து விடும்.
  • சூரியகாந்தி விதை சிறந்த நோய் எதிர்ப்புசக்தியாக இவை கருதப்படுகிறது. கூடுதலக இவை கல்லீரல் செயல்பாட்டை சீராக வைக்க துணைபுரிகிறது. சாலட் வகைகள், சூப், நொறுக்குத்தீனிகள் போன்று சாப்பிட்டு வரலாம்.
  • வாரம் மூன்று அல்லது இரண்டு முறையாவது பசலைக்கீரையை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். அரைகப் அளவுள்ள கீரையில் தினசரி தேவைக்கான வைட்டமின் இ 16% நிறைந்துள்ளன.
  • நன்றாக பழுத்த ஒரு அவகேடோவில் வைட்டமின் இ அளவானது தினசரி தேவைக்கு 20% அளவு கிடைத்துவிடும்.இதிலிருக்கும் பொட்டாசியம் சத்துகள் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதால் இவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன.
    ப்ரக்கோலி புரதம் மற்றும் வைட்டமின் இ நிறைந்த சிறந்த மூலாதார உணவாக பார்க்கப்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் ப்ரக்கோலி உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. ப்ரக்கோலியை சூப் ஆக செய்து, கிரேவியாக செய்து சாப்பிட்டு வரலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்